News September 26, 2025
தங்கம் விலை தாறுமாறாக மாறியது.. காரணம் என்ன?

தங்கம் விலை இம்மாதம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஆக.31-ம் தேதி ₹76,960-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 சவரன் இன்று(செப்.26) ₹84,400-க்கு விற்பனையாகிறது. இந்த மாதத்தில் இதுவரை ₹7,440 உயர்ந்துள்ளது. USA வரிவிதிப்பு, இந்திய <<17836820>>பங்குச்சந்தைகளின் தொடர் சரிவால்<<>> முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியதே விலை உயர்வுக்கு காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் உயருமாம்.
Similar News
News September 26, 2025
2026 தேர்தல்.. முடிவை மாற்றிய விஜய்

2026 தேர்தலுக்காக விஜய், புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவில் விஜய், N.ஆனந்த், அருண்ராஜ் உள்ளிட்ட ஒரு சில தலைவர்கள் மட்டுமே மக்களுக்கு அறியப்பட்டவர்களாக உள்ளனர். பல மாவட்ட செயலாளர்களை நிர்வாகிகளுக்கு கூட தெரியாத சூழல் உள்ளதால், பரப்புரையின்போது அந்தந்த தொகுதிகளின் முக்கிய நிர்வாகிகளை மக்களுக்கு விஜய் அறிமுகம் செய்ய உள்ளாராம். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News September 26, 2025
ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகம்… காரணம் இதுதான்

ஆண்களை விட பெண்களுக்கு சராசரி ஆயுள் அதிகம் என்பது உலகறிந்த உண்மை. சராசரியாக பெண்கள் 75.6 ஆண்டுகளும், ஆண்கள் 70.8 ஆண்டுகளும் வாழ்கிறார்கள் என்று அண்மையில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த 5 வயது இடைவெளிக்கு என்ன காரணம் என்ற கேள்வி பலரது மனதில் தோன்றியிருக்கும். மேல் உள்ள புகைப்படங்களில் அதற்கான விடை இருக்கிறது.
News September 26, 2025
ஆரம்பத்திலேயே ஏமாற்றிய கில்

இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ரன்களை குவிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இரண்டாவது ஓவரிலேயே இந்தியா முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. 2-வது ஓவரை திக்ஷனா வீச, அந்த பந்தை எப்படி கையாள்வது என்ற குழப்பத்தில் கில் (7 ரன்) தடுத்து ஆட, பாய்ந்து கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார் தீக்ஷனா. இதனால் 2-வது ஓவர் முடிவில் இந்திய அணி 22/1 ரன்கள் எடுத்துள்ளது.