News September 23, 2025

தாறுமாறாக மாறிய தங்கம் விலை

image

வரலாறு காணாத உச்சமாக, தங்கம் விலை கடந்த 2 நாள்களில் சவரனுக்கு ₹2,800 உயர்ந்து நடுத்தர மக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. 1920-ல் சவரன் ₹21-க்கு விற்கப்பட்ட தங்கம், இன்று ₹85,120-க்கு விற்பனையாகிறது. இதன்படி, 105 ஆண்டுகளில் 3,97,235% தங்கம் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2021 (₹35,000) முதல் 2025 இன்று வரையிலான (₹85,120) 5 ஆண்டுகளில் மட்டும் 138% தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Similar News

News September 24, 2025

BJP TN-க்கு பிரச்னை கொடுக்க இதுதான் காரணம்: உதயநிதி

image

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ரோல் மாடலாக CM ஸ்டாலின் உள்ளதாக உதயநிதி தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக கூறிய அவர், இதனால்தான் மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பிரச்னைகளை கொடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவை எதிர்த்து போராடக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் எனவும் கூறியுள்ளார்.

News September 24, 2025

ASIA CUP: பாகிஸ்தானிடம் வீழ்ந்த இலங்கை

image

பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 133 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் மட்டும் போராடி அரைசதம் அடித்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தானும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து சற்று தடுமாறியது. ஆனாலும் ஹூசைன் தலத்(32), முகமது நவாஸ்(38) அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 18-வது ஓவரில் பாக்., இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News September 24, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!