News March 22, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹280 குறைந்தது

image

கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹760 உயர்ந்து ₹49,880க்கு விற்பனையான நிலையில், இன்று ₹280 குறைந்து ₹49,600க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ₹35 குறைந்து ₹6,200க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹79.50க்கும் கிலோவுக்கு ₹2,000 குறைந்து ₹79,500க்கும் விற்பனையாகிறது.

Similar News

News May 8, 2025

பஹல்காம் தாக்குதல் தான் தொடக்கப்புள்ளி: விக்ரம் மிஸ்ரி

image

இந்தியா – பாக்., இடையே தற்போதைய பதற்றத்துக்கு தொடக்கப்புள்ளி பஹல்காம் தாக்குதலே என்று வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இந்தியா பதற்றத்தை உருவாக்க முயலவில்லை என்றும், இந்தியாவின் பதிலடி பதற்றத்தை தூண்டாத வகையில், பயங்கரவாதிகள் மீது மட்டுமே நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு டி.ஆர்.எப்., அமைப்பு 2 முறை பொறுப்பேற்றதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

News May 8, 2025

+2 தேர்வு முடிவுகள்: மாநில அளவில் 2 பேர் முதலிடம்

image

+2 பொதுத்தேர்வில் 2 மாணவர்கள் மாநில அளவில் 599 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி ஆங்கிலத்தை (99) தவிர, மற்ற அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். அதேபோல், தாராபுரத்தை சேர்ந்த மளிகைக் கடைக்காரரின் மகன் ராகுல் என்பவரும் ஆங்கிலத்தை (99) தவிர, மற்ற அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.

News May 8, 2025

OTT-யில் பாக்., Movie-களை நீக்க வேண்டும்: மத்திய அரசு

image

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், OTT தளங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. ஏற்கெனவே, பாகிஸ்தான் YouTube சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், Amazon Prime, Netflix, ZEE5, JioHotstar, SonyLIV உள்ளிட்ட OTT தளங்களில் உள்ள பாகிஸ்தானின் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், பாடல்களை உடனடியாக நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!