News December 28, 2024

தங்கம் விலை குறைந்தது

image

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்துள்ளது. நேற்று ₹57,200க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹57,080க்கு விற்கப்படுகிறது. நேற்று ₹7,150ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ₹15 குறைந்து ₹7,135க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றம் ஏதுமின்றி கிராம் ₹100ஆக உள்ளது.

Similar News

News March 11, 2026

PM மோடிக்கு CM ஸ்டாலின் அவசர கடிதம்

image

TN-ல் அனைத்து வகை சிலிண்டர்களும் தடையின்றி கிடைப்பதை PM மோடி உறுதிசெய்ய வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தனது கடிதத்தில் அவர், உணவகங்கள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தொழில்மயமான TN பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் நாடு திரும்ப சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 11, 2026

₹40,000+ சம்பளம்… 667 பணியிடங்கள்

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <>லிங்க்கில்<<>> ஏப்ரல் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

News March 11, 2026

‘அம்மா.. நான் சாகப் போகிறேன்’

image

மும்பையில் காதலன் கொடுத்த மென்டல் டார்ச்சரால், 6 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக புத்தி கொண்ட காதலன், மாணவி ஸ்துதி சோனாவானேவை(24) தொடர்ந்து மனதளவில் டார்ச்சர் செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், விரக்தி அடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை உணருங்கள் நண்பர்களே!

error: Content is protected !!