News December 6, 2024
தங்கம் விலை குறைந்தது

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 குறைந்துள்ளது. நேற்று ₹57,120க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹56,920க்கு விற்கப்படுகிறது. நேற்று ₹7,140ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், ₹25 குறைந்து. ₹7,115ஆக விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ₹101க்கு விற்பனையாகிறது.
Similar News
News November 18, 2025
EPS-ஐ விமர்சித்த விளம்பரம் தேடும் உதயநிதி: RB உதயகுமார்

அதிமுக தொண்டர்களுக்கு பெரியார் கொள்கை பற்றி தெரியாது என உதயநிதி விமர்சித்ததற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணா தொடங்கிய கட்சியை கபளீகரம் செய்து, உங்கள் குடும்பம் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது என்பதை மறக்க வேண்டாம் என அவர் சாடியுள்ளார். EPS-ஐ விமர்சிப்பதன் மூலம் உதயநிதி விளம்பரம் தேடுகிறார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆங்கிலத்தை இந்தியா எதிர்க்கவில்லை: PM

அடுத்த 10 ஆண்டுக்குள் காலனித்துவ மனநிலையில் இருந்து இந்தியா விடுபட வேண்டும் என்று PM மோடி தெரிவித்துள்ளார். எந்த நாடும் தனது சொந்த மொழிகளை விமர்சிப்பதில்லை என்று குறிப்பிட்ட PM, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் உலகளாவிய சிந்தனைகளை ஏற்றாலும், மொழி விஷயத்தில் சமரசம் செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும், ஆங்கிலத்தை இந்தியா எதிர்க்கவில்லை என்றும், உள்ளூர் மொழிகளையே ஊக்குவிப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.