News March 15, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 15) சவரனுக்கு ₹640 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராம் ₹8,220க்கும், சவரன் ₹65,760க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,12,000க்கும் விற்பனையாகிறது. நேற்று ஒரே நாளில், சவரனுக்கு ₹1,440 அதிகரித்த நிலையில், இன்று சரிவைச் சந்தித்துள்ளது.

Similar News

News March 15, 2025

பிரபல நடிகர் மறைந்தார்… திரையுலகம் அஞ்சலி

image

பிரபல பாலிவுட் மூத்த நடிகரும், தயாரிப்பாளருமான தேவ் முகர்ஜி (83), உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் திரண்டு வந்து நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தியபின், அவரது இறுதிச்சடங்கு நடந்தது. அப்போது நடிகர் ரன்பீர் கபூர் அவரது உடலை சுமந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முகர்ஜியின் மகனும் இயக்குநருமான அயன், ரன்பீரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 15, 2025

இபிஎஸ் – செங்கோட்டையன் மோதல்: காரணம் என்ன? (1/2)

image

பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த செங்கோட்டையன், இபிஎஸ்ஸை சந்திக்காமல் புறக்கணித்திருக்கிறார். இதற்கு என்ன காரணம் என கேட்டபோது, அவரிடமே கேளுங்கள் என இபிஎஸ் சொல்ல, அதற்கு பதில் அளிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார் செங்கோட்டையன். உண்மையில் இருவருக்கும் இடையே என்ன பிரச்னை?

News March 15, 2025

என்ன சொல்ல வருகிறார் செங்கோட்டையன்? (2/2)

image

கோவை அன்னூரில் இபிஎஸ்ஸூக்கு நடந்த பாராட்டு விழாவில் தான் விரிசல் வெளியே தெரிய ஆரம்பித்தது. விழா அழைப்பிதழில் எஸ்.பி.வேலுமணிக்கு கீழ் அவரது பெயர் இடம்பெற்றது தான் செங்கோட்டையன் நிகழ்ச்சியை புறக்கணிக்க, காரணம் என கூறப்பட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இணைத்து தேர்தலை சந்திக்கலாம் என்ற ஐடியாவை இபிஎஸ் பரிசீலிக்காததும் செங்கோட்டையன் போர்க்கொடி உயர்த்த காரணம் என்கிறது அதிமுக வட்டாரம்.

error: Content is protected !!