News July 4, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹440 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹440 குறைந்தது. இதனால், 22 கேரட் ஒரு கிராம் ₹9,050-க்கும், சவரன் ₹72,400-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாள்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், சர்வதேச <<16934070>>சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்<<>> காரணமாக இந்தியாவிலும் தங்கம் விலை சற்று சரிந்துள்ளது.
Similar News
News July 5, 2025
பிரபல நடிகர் மைக்கேல் மேட்சென் காலமானார்

‘Kill Bill’, ‘Reservoir Dogs’ உள்ளிட்ட ஏராளமான க்ரைம் த்ரில்லர் படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன்(67) காலமானார். நேற்று மாரடைப்பு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மேலாளர் லிஸ் ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார். சமீப காலமாக சினிமா பிரபலங்கள் பலரும் மாரடைப்பு காரணமாக மரணித்து வருகின்றனர். #RIP
News July 4, 2025
வழுக்கை தலையா… இனி கவலை வேண்டாம்

வழுக்கைக்கு விரைவில் தீர்வு காணலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். வழுக்கை ஏற்பட, ஹேர் ஃபாலிக்கில்கள் வளர (அ) அழிய TGF-beta என்ற புரதம் தான் காரணம் என்பதை கண்டறிந்துள்ளனர். புதிய முடி வளர்வதற்கு இந்த புரதம் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். அதுவே, அளவை தாண்டினால், முடிகள் இறப்பை தூண்டி வழுக்கையை ஏற்படுத்துகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வழியை கண்டறிந்தால், வழுக்கையில் இருந்து விடுதலை நிச்சயம்.
News July 4, 2025
நடிகர், நடிகைகளுக்கு போதை சப்ளை: பரபரப்பு வாக்குமூலம்

போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தது தொடர்பாக கைதான கெவின், போலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளான். அதில் கானாவை சேர்ந்த ஜான் தான், கொக்கைன் சப்ளை செய்து வந்ததாகவும், அவரின் வலதுகரமான பிரதீப்பிடம் கேட்டால் பிரசாத் மூலம் கொக்கைனை அனுப்புவார் என்று தெரிவித்தார். மேலும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வாயிலாக, நடிகர், நடிகைகளுக்கு தானும், பிரசாத்தும் கொக்கைன் சப்ளை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.