News March 18, 2025
அலற வைக்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ₹66,000ஐ தொட்டுள்ளது. மார்ச் 14ஆம் தேதி ₹66,400ஐ தொட்ட தங்கத்தின் விலை, அதன்பின் சற்றே குறைந்து ஆசுவாசப்படுத்தியது. ஆனால், இன்று மீண்டும் ₹66,000ஐ தொட்டு, தங்கம் வாங்குவோரை அலற வைத்திருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதே இதற்கு காரணம் என்கின்றனர் முதலீட்டாளர்கள்.
Similar News
News March 18, 2025
ஆண் குழந்தைதான் வேணும்… கொடூரத் தாயால் விபரீதம்!

ராஜஸ்தானில் ஆண் குழந்தை பெறாத விரக்தியில், பிறந்து 17 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றத் தாயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் மன உளைச்சலில் இருந்த அந்த பெண், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ளார். கணவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ஆணோ, பெண்ணோ அனைவரும் சமம் என்பதை சமூகம் எப்போதுதான் உணருமோ?
News March 18, 2025
தெரு நாயை கொன்றால் என்ன தண்டனை தெரியுமா?

தெருவில் திரியும் நாய், பூனை, பசு போன்ற விலங்குகளுக்கும் நமது சட்டத்தில் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. வேண்டுமென்றே வாகனங்களால் மோதி அவற்றை கொன்றாலோ, காயப்படுத்தினாலோ காவல்நிலையத்தில் புகார் தரலாம். அங்கு IPC சட்டத்தின் 428,429ஆவது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்த வேண்டும். அந்த பிரிவில் வழக்குப்பதிவானால், ரூ.2,000 அபராதம் (அ) 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வழி ஏற்படும்.
News March 18, 2025
ஜல்லிக்கட்டு வீரர் உயிரிழப்பு: CM ஸ்டாலின் இரங்கல்

மதுரை மாவட்டம் கீழக்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டில் உட்கரை கச்சிராயிருப்பை சேர்ந்த மகேஸ்பாண்டி உயிரிழந்ததை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததாக அவர் கூறியுள்ளார். அவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.