News March 29, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 29) ₹160 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,360க்கும், சவரன் ₹66,880க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹113க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,13,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,400 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 2, 2025
தமிழக மீனவர்களை மத்திய அரசு மறந்து விடுகிறது: CM

கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய <<15965956>>CM ஸ்டாலின்<<>>, இலங்கை அரசுடனான ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி மீனவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவதாகவும், தமிழக மீனவர்களை மத்திய அரசு மறந்துவிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
News April 2, 2025
4 மாவட்டங்களுக்கு விடுமுறை

காசிவிசுவநாத சாமி கோயில் குடமுழுக்கு, பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்திற்கு ஏப்.7, 11ஆம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சனி, ஞாயிறு, திங்கள்கிழமை (ஏப்.5,6,7) என தொடர்ந்து 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வருகிறது. ஏற்கெனவே, நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏப்.7ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News April 2, 2025
கச்சத்தீவை மீட்க தனித் தீர்மானம் கொண்டுவந்தார் CM

கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். தீர்மானத்தை முன்மொழிந்து அவையில் பேசிய அவர், இலங்கை அரசிடம் தவிக்கும் மீனவர்கள், படகுகளை நல்லெண்ண அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இலங்கை செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமருடன் இந்த விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.