News February 18, 2025
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.18) ரூ.240 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,970க்கும், சவரன் ரூ.63,760க்கும் விற்பனையாகிறது. அதேவேளையில் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.108க்கும், பார் வெள்ளி கிலோ ரூ.1,08,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்வது குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க..
Similar News
News November 12, 2025
விலை மொத்தம் ₹8,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹3 உயர்ந்து ₹173-க்கும், கிலோ வெள்ளி ₹3,000 உயர்ந்து ₹1,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக வெள்ளி விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த 3 நாள்களில் மட்டும் சுமார் ₹8,000 உயர்ந்துள்ளது. மீண்டும் வெள்ளி விலை உயர்ந்து வருவதால், நகை பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
News November 12, 2025
ரோஹித், கோலிக்கு BCCI போட்ட ரூல்!

ரோஹித், கோலியை விஜய் ஹசாரே தொடரில் விளையாடும் படி, BCCI உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தங்களின் பார்மை தக்கவைத்து கொள்ள, உள்நாட்டு போட்டிகளில் அவர்களை விளையாட அறிவுறுத்தி இருக்கிறதாம். முன்னதாக, வரும் 26-ம் தேதி நடக்கும் சையத் முஷ்டாக் அலி T20 தொடரில் மும்பை அணிக்காக விளையாட ரோஹித் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர் விஜய் ஹசாரே தொடரிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 12, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: மேலும் ஒரு டாக்டர் கைது

டெல்லி கார்வெடிப்பு வழக்கில் ஏற்கனவே 6 டாக்டர்கள் வரை கைதான நிலையில் 7-வதாக டாக்டர் தஜமுல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும் மஹாராஜா ஹரிசிங் ஹாஸ்பிடலில் பணியாற்றி வந்த இவருக்கு, கார் வெடிப்பு சதியில் கைதான டாக்டர்களுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர் காஷ்மீரின் குல்காம் பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.


