News March 19, 2025

தங்கம் விலை சவரனுக்கு மேலும் ₹320 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 19) சவரனுக்கு ₹320 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,290க்கும், சவரன் ₹66,320க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹320 உயர்ந்த நிலையில், இன்றும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதேபோல், வெள்ளி கிராமுக்கு ₹1 உயர்ந்து புதிய உச்சமாக ஒரு கிராம் ₹114க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது.

Similar News

News March 19, 2025

கரும்பு டன்னுக்கு ₹4,000 உதவித்தொகை: அரசு அறிவிப்பு

image

வரும் ஆண்டில் இருந்து ஒரு டன் கரும்புக்கு ₹4,000 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கரும்பு ஊக்கத்தொகை குறித்த அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், நிலுவையில் இல்லாமல் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

தஞ்சை துக்காச்சியம்மன் கோயிலுக்கு UNESCO விருது

image

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள துக்காச்சியம்மன் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது வழங்கி கெளரவித்துள்ளது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் தொன்மை மாறாமல், புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், விருது வழங்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த கோயிலில் துர்கை அம்மன் இறைவனை வழிபட்டதால், துர்க்கை ஆட்சி என்ற பெயர் துக்காச்சி என மருவியதாக சொல்லப்படுகிறது.

News March 19, 2025

புதிய பட்ஜெட் பைக் அறிமுகம்

image

பட்ஜெட் ப்ரெண்ட்லியான பைக் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குத்தான் இந்த செய்தி. ரூ.68,767-க்கு SHINE 100 என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா நிறுவனம். கருப்புடன் பச்சை, மஞ்சள், ஊதா உள்ளிட்ட 5 வண்ணங்களில் இந்த புதிய பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65 கி.மீ. மைலேஜ், அலாய் வீல், 9 லி. கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளிட்ட அம்சங்களுடன் சந்தையில் ஹோண்டா SHINE 100 களமிறக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!