News April 9, 2025

தங்கம் விலை ₹520 உயர்ந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து ₹60 ஆயிரத்தை கடந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹520 உயர்ந்து ₹66,320க்கும், கிராமுக்கு ₹65 உயர்ந்து ₹8,290க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹102க்கும் விற்பனையாகிறது.

Similar News

News January 20, 2026

கிட்னியை பாதுகாக்க எத்தனை லிட்டர் தண்ணீர் தேவை?

image

உடல் கழிவுகளை வெளியேற்றும் முக்கிய உறுப்பான கிட்னியை பாதுகாக்கும் ஒரே பொருள் தண்ணீர்தான். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கிட்னி செயலிழந்துவிடும். இந்நிலையில், கிட்னியை பாதுகாக்க தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் (8-10 கிளாஸ்) குடிக்க வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். மிதமான சூட்டில் உள்ள வெந்நீரை குடிப்பது சிறந்தது என்றும் அறிவுறுத்துகின்றனர். இப்பதிவை நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 20, 2026

சட்டவிரோத குடியேறிகளை இந்தியா அனுமதிக்காது: PM

image

சட்டவிரோத குடியேறிகள் நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக PM மோடி பேசியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், உலகின் சக்திவாய்ந்த நாடுகள்கூட சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறிந்து நாடுகடத்துகின்றன. அவைகளை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று உலக நாடுகள் கேட்கவில்லை என்றும், அதே போன்று நமது இளைஞர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டவிரோத குடியேறிகளை இந்தியாவும் அனுமதிக்காது எனவும் கூறியுள்ளார்.

News January 20, 2026

‘ஜன நாயகன்’ மறு ஆய்வுக்கு கால தாமதம் ஆனது ஏன்?

image

‘ஜன நாயகன்’ பட சென்சார் பிரச்னை தொடர்பான வழக்கு உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மறு ஆய்வு செய்வது குறித்து எத்தனை நாள்களில் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மறு ஆய்வுக்கு 20 நாள்களில் குழு அமைக்க வேண்டும் என சென்சார் போர்டு விளக்கம் அளித்தது. மேலும் மறு ஆய்வு குழு சான்றிதழ் வழங்க மறுத்தால் ஐகோர்ட்டை நாடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!