News December 21, 2024
தங்கம் விலை ₹480 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹480 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ₹56,320க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அது ₹56,800ஆக உள்ளது. நேற்று ₹7,040க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ₹60 உயர்ந்து ₹7,100ஆக விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹99ஆக உள்ளது.
Similar News
News March 14, 2026
உச்சநீதிமன்ற நிர்வாகத்தை இனி AI கவனிக்கும்!

கடந்த 2022-ல் Ex SC CJI சந்திரசூட் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு, தற்போது ஒரு புதிய அமர்வின் முன் மீண்டும் பட்டியலிடப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்த விசாரணையில் SC-ன் பதிவகத்தில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இதையடுத்து வழக்கு ஒதுக்கீடு & அமர்வுகளைத் தீர்மானிக்கும் பணிகளில் மனிதக் குறுக்கீட்டை நீக்கிவிட்டு, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த CJI சூர்யா காந்த் முடிவெடுத்துள்ளார்.
News March 14, 2026
எங்கள் ஆடையால் உங்களுக்கு என்ன பிரச்னை? ராஷி கண்ணா

எந்தவொரு பெண்ணுக்கும் தனக்கு பிடித்த ஆடைகளை அணியும் சுதந்திரம் உண்டு என்று ராஷி கண்ணா கூறியுள்ளார். <<19291889>>நடிகைகளின் உடை அணியும் பாணி <<>>குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எந்த ஆடையை அணிய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது அந்த பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் உரிமை சார்ந்தது என்றார். அத்துடன் நாங்கள் அணியும் ஆடையால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 14, 2026
சசிகலாவிற்கு புகழேந்தி வேண்டுகோள்!

புரட்சி அதிமுக என்ற கட்சியை நிறுவிய புகழேந்தி திமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர் சசிகலா குறித்து பேசுகையில், 9 வருடங்களாக சசிகலா எங்கே சென்றிருந்தார் என கேள்வி எழுப்பினார். அவர் கட்சி துவங்கியிருப்பது நல்ல விஷயம், வாழ்த்துக்கள் என்றவர், தொடர்ந்து கட்சியை நடத்த வேண்டும்; தற்போது பேசிவிட்டு மீண்டும் அமைதியாகி மற்றவர்களை ஏமாற்றக் கூடாது என்பதே தனது வேண்டுகோள் எனவும் கூறியுள்ளார்.


