News March 29, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 29) ₹160 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,360க்கும், சவரன் ₹66,880க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹113க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,13,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,400 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 3, 2025
SIR பணிகளுக்கு தடைவிதிக்க கோரி திமுக மனு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளுக்கு தடைவிதிக்க கோரி, திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ECI-ன் இந்த முன்னெடுப்பு அவசர கோலத்திலானது, பாரபட்சம் காட்டக்கூடியது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது என மனுவில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, SIR-ன் மூலம் பாஜகவிற்கு எதிரான வாக்காளர்களை நீக்க முயற்சிப்பதாக திமுக குற்றஞ்சாட்டியிருந்தது.
News November 3, 2025
BREAKING: நாளை மறுநாள் அனைத்து பள்ளிகளுக்கும்…

₹50,000 வரை பரிசுகளை வெல்லும் வினாடி வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நவ.5(புதன்கிழமை) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சூழல் அறிவோம்’ என்ற தலைப்பில் 6 – 9 வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த வினாடி வினா போட்டி நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. https://www.tackon.org/soozhal இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் 2 மாணவர்களை உள்ளடக்கிய 5 குழுக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 3, 2025
கேன்சர் சிகிச்சை எடுப்பவர்கள் கருத்தரிப்பதில் பிரச்னையா?

மார்பகப் புற்றுநோய்க்காக வழங்கப்படும் கீமோதெரபி, கருமுட்டைகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடும். இது சிலருக்கு தற்காலிகமாகவும், சிலருக்கு நிரந்தரமாகவும் கருவுறுதலை பாதிக்கலாம். எனவே, சிகிச்சையை தொடங்கும் முன் கருவுறுதல் பற்றி டாக்டரிடம் பேசுங்கள். கருமுட்டை அல்லது கருப்பை திசுவை உறைய வைக்கலாம். கர்ப்பம் தரிப்பதற்கு இப்படி பல வழிகள் இருப்பதால் கவலைவேண்டாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.


