News March 28, 2025
3 நாள்களில் சவரனுக்கு ₹1,240 உயர்ந்த தங்கம்

சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி 22 கேரட் ஒரு சவரன் ₹65,480க்கு விற்பனையானது. பின்னர், 26ஆம் தேதி சவரனுக்கு 80 ரூபாயும், நேற்று 320 ரூபாயும் அதிகரித்தது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய உடனே சவரனுக்கு ₹840 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,240 உயர்ந்து ₹66,720க்கு விற்பனையாகிறது.
Similar News
News March 31, 2025
செங்கல்பட்டு மாவட்ட தவெக தலைவர் காலமானார்

செங்கல்பட்டு மாவட்ட தவெக தலைவர் சூரிய நாராயணன் (36) உடல்நலக்குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 15ஆம் தேதி, அக்கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் சஜி மாரடைப்பால் உயிரிழந்தது கவனிக்கத்தக்கது.
News March 31, 2025
BREAKING: திபெத்தில் நிலநடுக்கம்

திபெத்தில் அதிகாலை 3.24 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 170 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5ஆகப் பதிவாகியுள்ளது. மியான்மர், தாய்லாந்து நாடுகளில் இரு தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இதுவரை 2,500 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்தடுத்து நிலநடுக்கங்களால் பொதுமக்கள் நிம்மதியை இழந்து சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
News March 31, 2025
சத்தீஸ்கரில் ஆயுதங்களுடன் 50 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஸ்கர் மாநிலம் பிஜபூரில் மனம் திருந்தி வாழ உள்ளதாக கூறி 50 நக்சல்ஸ் நேற்று சரணடைந்தனர். இதில் தேடப்படும் 14 முக்கிய நக்சலைட்டுகளும் அடக்கம். மொத்தமாக அவர்களின் தலைக்கு வெகுமதியாக ₹68 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயுதங்களுடன் சரணடைந்தவர்களை வரவேற்பதாகவும், அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும் எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.