News April 10, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.10) சவரனுக்கு ₹1,200 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,560க்கும், ஒரு சவரன் ₹68,480க்கும் விற்பனையாகிறது. USA அதிபர் டிரம்ப், உலக நாடுகள் மீது விதித்த வரி உயர்வால் உலக சந்தைகள் பெரும் ஆட்டம் கண்டன. இதனால் கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தங்கம், டிரம்ப் வரி உயர்வை நிறுத்தி வைத்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது.
Similar News
News October 16, 2025
TTF வாசனுக்கு திருமணம்❤️❤️ மனைவி இவர்தான்.. PHOTO

யூடியூபரும் நடிகருமான TTF வாசன், கடந்த செப்டம்பரில் தனது மாமா மகளை திருமணம் செய்ததாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் போட்டோஸ், வீடியோக்களை வெளியிட்டாலும், அதில் மணப்பெண்ணின் முகம் எமோஜிகளால் மறைத்த படியே இருந்தது. இந்நிலையில், முதல்முறையாக தனது காதல் மனைவியின் முகத்தை Reveal செய்துள்ளார் வாசன். இந்த ஜோடியை பார்த்த நெட்டிசன்கள், லைக்ஸ் போட்டு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
News October 16, 2025
தீபாவளிக்கு மொறு மொறு முறுக்கு ரெசிபி!

தீபாவளிக்கு முறுக்கு ருசிக்காவிட்டால் , பண்டிகை என்ற திருப்தியே கிடைக்காது. எண்ணெய் குடிக்காமல், மொறு மொறு முறுக்கு செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம். பொருள்கள்: பச்சரிசி, உளுந்து, எள், பொறி கடலை, வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு, தண்ணீர், கடலை எண்ணெய். செய்முறையை SWIPE செய்து பார்க்கவும்.
News October 16, 2025
டிஜிட்டல் அரஸ்ட்: முதியவரிடம் ₹58 கோடி மோசடி

வசதிபடைத்த முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் மோசடிகள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. சமீபத்தில் மும்பையில் வசிக்கும் 72 வயது தொழிலதிபருக்கு சிபிஐ பெயரில் வீடியோ கால் வந்துள்ளது. அதில் நீங்கள் பண மோசடியில் ஈடுபட்டதாக, போலி ஆவணங்களை காட்டி மிரட்டி ₹58 கோடியை பறித்துள்ளனர். இதுதொடர்பாக இதுவரை 3 பேரை கைது செய்த காவல்துறை, முக்கிய குற்றவாளிகளை தேடி வருகிறது. மக்களே உஷார்