News April 9, 2025
தங்கம் விலை ₹520 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து ₹60 ஆயிரத்தை கடந்ததால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹520 உயர்ந்து ₹66,320க்கும், கிராமுக்கு ₹65 உயர்ந்து ₹8,290க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹102க்கும் விற்பனையாகிறது.
Similar News
News November 4, 2025
WC-யில் தோற்றாலும் முதலிடம் பிடித்த SA கேப்டன்

மகளிர் உலகக்கோப்பை தொடர் முழுவதும், ICC ODI தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் இருந்தார். ஆனால், ஃபைனலில் இந்தியாவிடம் தோற்ற SA அணி கேப்டன் லாரா வோல்வார்ட், அவரை தற்போது பின்னுக்கு தள்ளியுள்ளார். செமி ஃபைனல், ஃபைனல் என 2 போட்டிகளிலும் சதம் விளாசி அவர் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் முதல்முறையாக டாப் 10-க்குள் (10-வது இடம்) இடம்பிடித்துள்ளார்.
News November 4, 2025
திமுகவில் அடுத்தடுத்து இணையும் அதிமுக புள்ளிகள்

மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான் என அதிமுகவில் இருந்த முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து திமுகவில் இணைந்து வருகின்றனர். சொந்த ஊரில் மிகவும் செல்வாக்கு பெற்ற இவர்களின் வருகை திமுகவுக்கு பலம் சேர்க்கும் என்பது உண்மைதான். அதே நேரம், புதிதாக இணையும் மாற்றுக் கட்சியினருக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டால், திமுகவினர் அதிருப்தி அடையவும் வாய்ப்புண்டு. உங்க கருத்து?
News November 4, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தாச்சு அப்டேட்

ஜூலை 15 முதல் தற்போது வரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். புதிய பயனர்களுக்கு டிச.15-ல் ₹1,000 வரவு வைக்கப்படும் என உதயநிதி அறிவித்திருந்தார். ஆனால், திட்டத்திற்கு தகுதியானவர்கள் குறித்த அறிவிப்பு இன்னமும் வெளியாகாததால் பலரும் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், தகுதியானோர் விவரம் நவ.30-க்குள் தெரிவிக்கப்படும் என உதயநிதி மீண்டும் உறுதியளித்துள்ளார்.


