News April 29, 2025

ஏப்ரலில் சவரனுக்கு ₹3,760 உயர்ந்த தங்கம்!

image

தங்கம் விலை இம்மாதம் கடும் உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 1-ம் தேதி 22 கேரட் 1 கிராம் ₹8,510-க்கும், சவரன் ₹68,080-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் (28 நாள்களில்) கிடுகிடுவென உயர்ந்து இன்று (ஏப்.29) ஒரு சவரன் ₹71,840-ஆக விற்பனையாகிறது. அதாவது இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹3,760 உயர்ந்துள்ளது. நாளை(ஏப்.30) அட்சய திருதியை என்பதால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 23, 2025

தி.மலை: இனி ஈஸியா பட்டாவில் திருத்தம் செய்யலாம்!

image

நிலம் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில்<> eservices.tn.gov.in <<>>என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலூர் மக்கள் இனி தங்கள் நிலம் தொடர்பான விவரங்களை ஆன்லைனிலே தெரிந்துகொள்ளலாம். மேலும், பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தாசில்தார் அலுவலகத்தை நாடலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர்

News November 23, 2025

இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் தமிழன்

image

IND-க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தெ.ஆப்., வீரர் முத்துசாமி, சர்வதேச முதல் டெஸ்ட் சதத்தை விளாசி அசத்தியுள்ளார். தெ.ஆப்., தற்போது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்துள்ளது. IND சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தெ.ஆப்., 400 ரன்களை கடப்பதற்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டின் நாகையை பூர்வீகமாக கொண்ட முத்துசாமியின் நிதானமான ஆட்டம்தான்.

News November 23, 2025

தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பது கண்டுபிடிப்பு

image

பிஹாரில் 6 மாவட்டங்களில் உள்ள 40 தாய்மார்களின் தாய்ப்பால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், அதில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்ததன் காரணமாக தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தாய்ப்பாலை குழந்தைகள் பருகினால் அவர்களுக்கு புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் என AIIMS டாக்டர் அசோக் சர்மா எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!