News May 8, 2025

4 நாள்களில் சவரனுக்கு ₹3,000 உயர்ந்த தங்கம்!

image

சென்னையில் கடந்த 4 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹3,000 உயர்ந்துள்ளது. கடந்த 4-ம் தேதி ₹8,755-க்கு விற்கப்பட்ட 22 கேரட் தங்கம் இன்று (மே 8) ₹9,130-க்கு விற்பனையாகிறது. ₹70,040-க்கு விற்பனையான ஒரு சவரன் ₹73,040-ஆக அதிகரித்துள்ளது. இம்மாதத்தின் முதல் வாரத்தில் சரிவைக் கண்ட தங்கம் 2-வது வாரத்தில் ஏறுமுகத்தில் இருப்பதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் கருத்து என்ன?

Similar News

News January 21, 2026

ராகுல் காந்தியை சந்திக்கிறாரா கனிமொழி?

image

திமுக – காங்கிரஸ் கூட்டணி மதில் மேல் பூனை போல தடுமாறி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டிஆர் பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் ராகுல் காந்தி மற்றும் KC வேணுகோபாலை டெல்லியில் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அதிக தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்குவது குறித்து KC வேணுகோபால் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 21, 2026

இனி எல்லாமே T20 மயம் தான்!

image

ODI கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்து விட்டு, அடுத்த 4 மாதங்களுக்கு இந்தியா மயமாகவுள்ளது. இன்று முதல் NZ-க்கு எதிரான T20I தொடர் நடைபெறுகிறது. இத்தொடர் முடிந்தவுடன் நடப்பு சாம்பியன் இந்தியா மீண்டும் கோப்பையை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் பிப். 7-ம் தேதி T20I WC தொடங்கவுள்ளது. அத்தொடர் முடியும் அதே வேகத்தில், மார்ச் 26-ம் தேதி IPL தொடர் ஆரம்பிக்கிறது.

News January 21, 2026

மோடி, கோலி இல்ல.. இவர்தான் நாட்டின் டாப் செலிபிரிட்டி!

image

ஜனவரி 1-15 காலகட்டத்தில் நாட்டின் பிரபலமான நபர்களின் பட்டியல் வெளிவந்துள்ளது. சோஷியல் மீடியா டிரெண்ட், மக்கள்- மீடியாவின் கவனத்தில் தொடர்ந்து நீடிப்பது போன்ற தரவுகளின் கீழ் இந்த லிஸ்ட் தயாராகியுள்ளது. இந்த பட்டியலில் PM மோடி, விராட் கோலி ஆகியோரை முந்தி நடிகர் ஒருவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் என அறிய மேலே உள்ள படத்தை இடதுபக்கமாக Swipe பண்ணுங்க.

error: Content is protected !!