News January 2, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹240 உயர்வு

image

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 உயர்ந்துள்ளது. நேற்று சவரன் ₹57,200 என்று விற்கப்பட்ட தங்கம், இன்று சவரன் ₹57,440 என்று விற்கப்படுகிறது. நேற்று ₹7,150க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று ₹30 உயர்ந்து ₹7,180ஆக உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹99க்கு விற்பனையாகிறது.

Similar News

News November 24, 2025

1.3 கோடி ஆண்டு பழமையான ஆமைக்கு ஷகீரா பெயர்!

image

புதிய இனம் கண்டறியப்பட்டால் பொதுவாக அறிவியல் முறைப்படி பெயர் வைக்கப்படும். ஆனால், கொலம்பியாவில் உள்ள தடாகோவா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 1.3 கோடி ஆண்டுகள் பழமையான ஆமை படிமத்துக்கு, கொலம்பிய ராப் பாடகி ஷகீராவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷகீராவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், ஆராய்ச்சியாளர் எட்வின் கேடனாவின் வாக்குறுதியின் பேரிலும் ‘Shakiremys colombiana’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

News November 24, 2025

பட்டியலின மக்களுக்கும் திமுக செய்யும் துரோகம்: அன்புமணி

image

SC ஆணையிட்டு ஓராண்டாகியும் பட்டியலின சமூகத்துக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது ஏன் என அன்புமணி கேட்டுள்ளார். இதேபோல வன்னியர்களுக்கும் உள் இடஒதுக்கீடு வழங்கவில்லை என்ற அவர், வன்னியர்களாக இருந்தாலும், பட்டியலினத்தவர்களாக இருந்தாலும் சமூகநீதி வழங்கக்கூடாது என்பதே திமுகவின் கொள்கை எனவும் விமர்சித்துள்ளார். இதனால், அநீதி இழைக்கும் திமுகவுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

News November 24, 2025

BREAKING: பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்

image

பாலிவுட்டின் ‘ஹீ மேன்’ஆக கொண்டாடப்பட்ட தர்மேந்திரா (89) காலமானார். உடல்நலக்குறைவால் மும்பை பிரீச் கேண்டி தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த அவர், கடந்த 12-ம் தேதி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதற்கு உடனே அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வீடு திரும்பினார். இந்நிலையில், சற்றுநேரத்திற்கு முன் அவர் உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!