News March 29, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 29) ₹160 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,360க்கும், சவரன் ₹66,880க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹113க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,13,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,400 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 3, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 3, ஐப்பசி 17 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
News November 3, 2025
இந்திய அணிக்கு PM மோடி வாழ்த்து

மகளிர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வரலாற்று வெற்றியானது பல எதிர்கால சாம்பியன்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், தொடர் முழுவதும் ஒரு குழுவாக இந்திய அணியினர் சிறப்பாகவும், உறுதித்தன்மையுடனும் செயல்பட்டதாக PM மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்த வெற்றி லட்சக்கணக்கான பெண்களுக்கு ஊக்கமாக அமையும் என அமித்ஷா கூறியுள்ளார்.
News November 3, 2025
தீப்தி சர்மாவுக்கு தொடர் நாயகி விருது

பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் கலக்கிய தீப்தி சர்மாவுக்கு தொடர் நாயகி விருது வழங்கப்பட்டுள்ளது. நடப்பு WC தொடரில் அவர் 9 போட்டிகளில் 215 ரன்கள் குவித்தது மட்டுமின்றி 22 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆல் ரவுண்டராக ஜொலித்துள்ளார். இறுதிப்போட்டியில் தீப்தி சர்மா லாரா வோல்வார்ட், ஜாஃப்டா, ட்ரயான், டி கிளெர்க், அன்னேரி டெர்க்சென் ஆகிய 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


