News March 28, 2025
3 நாள்களில் சவரனுக்கு ₹1,240 உயர்ந்த தங்கம்

சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி 22 கேரட் ஒரு சவரன் ₹65,480க்கு விற்பனையானது. பின்னர், 26ஆம் தேதி சவரனுக்கு 80 ரூபாயும், நேற்று 320 ரூபாயும் அதிகரித்தது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய உடனே சவரனுக்கு ₹840 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,240 உயர்ந்து ₹66,720க்கு விற்பனையாகிறது.
Similar News
News April 3, 2025
மின் வாரியம் சார்பில் சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் வரும் 5ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சனிக்கிழமையான அன்று, காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயற்பொறியாளர் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். மின் கட்டணம், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் குறித்து புகார் அளிக்கலாம், அல்லது சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்ளலாம்.
News April 3, 2025
மே மாதம் வரலாறு படைக்க போகும் இந்தியர்

இந்தியாவின் சுபன்ஷு சுக்லா, வரும் மே மாதம் நாசா உதவியின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு (ISS) பயணிக்க உள்ளார். தனியாரின் Axiom Mission 4 திட்டத்தின் ஒரு பகுதியாக, 4 வீரர்களுடன் அவர் பயணிக்க உள்ளார். இதன்மூலம், ISS செல்லும் முதல் இந்தியர் என்ற பெயரை அவர் பெற உள்ளார். அதேபோல், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்திலும் சுக்லா இடம்பெற்றுள்ளார்.
News April 3, 2025
கோவா அணிக்கு மாறியது ஏன்? ஜெய்ஸ்வால் விளக்கம்

தன்னை தேடி வந்த கேப்டன் பதவியை எடுத்துக் கொண்டதாக, ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த முடிவை எடுப்பது சவாலாக இருந்ததாகவும், தன்னுடைய இன்றைய நிலைக்கு மும்பை அணி தான் காரணம் எனவும், அதற்காக வாழ்நாள் முழுவதும் அந்த அணிக்கு கடைமைபட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ஜெய்ஸ்வால், தற்போது கோவா அணிக்கு மாறியுள்ளார்.