News April 10, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.10) சவரனுக்கு ₹1,200 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,560க்கும், ஒரு சவரன் ₹68,480க்கும் விற்பனையாகிறது. USA அதிபர் டிரம்ப், உலக நாடுகள் மீது விதித்த வரி உயர்வால் உலக சந்தைகள் பெரும் ஆட்டம் கண்டன. இதனால் கடந்த சில தினங்களாக குறைந்து வந்த தங்கம், டிரம்ப் வரி உயர்வை நிறுத்தி வைத்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது.
Similar News
News August 26, 2025
பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்கு

நிதி நிறுவனத்தில் ₹40,000 கடன் வாங்கிய சுமித்ரா, 8 மாத தவணைகள் செலுத்திய பிறகு மீதி தொகையை செலுத்தவில்லை. இதனால் கடன் பெற்றுத் தந்த ரூபினா மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரும் சுமித்ராவிடம் பணத்தை திரும்ப கேட்டனர். மனமுடைந்த சுமித்ரா, வீட்டில் இருந்த பூச்சி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அளித்த புகாரின் பேரில், நேற்று இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
News August 26, 2025
விஜய்யை சீமான் கடுமையாக எதிர்ப்பது ஏன்?

திரைக்கவர்ச்சியை கொண்டு மக்களை விஜய் திசை திருப்புவதை ஏற்க முடியாது என்றும், அதனால் தான் சீமான் விஜய்யை எதிர்ப்பதாக நாதகவை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் தெரிவித்துள்ளார். கேரளாவிலும், கர்நாடகாவிலும் தனது படம் ஓட வேண்டுமென்பதற்காக முல்லை பெரியாறு, காவிரி பிரச்னைகள் குறித்து விஜய் பேச மறுப்பதாகவும் விமர்சித்தார். விஜய் மட்டுமில்லை அஜித், SKவும் மாநாடு நடத்தினாலும் இதேபோன்று கூட்டம் வருமென்றார்.
News August 26, 2025
பெண் ரூபத்தில் விநாயகர் காட்சி தரும் கோயில்!

முழுமுதற் கடவுளான விநாயகர் பெண் ரூபத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் என்ற ஊரில் அமைந்துள்ள, தாணுமாலயன் கோயிலில் காட்சி தருகிறார். இக்கோயிலின் ஒரு தூணில் பெண் வடிவில் இருக்கும் பிள்ளையாருக்கு விநாயகி, கணேஷ்வரி, விக்னேஷ்வரி என பல்வேறு பெயர்கள் உள்ளன. பெண் அணிகின்ற ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றி, மறுகாலை மடக்கி, புடவையில் பெண் தெய்வமாக விநாயகர் காட்சி தருகிறார். SHARE IT.