News October 17, 2025
தங்கம் விலை தலைகீழாக மாறுகிறது

இப்போது ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை, பின்னர் 30 முதல் 35% வரை குறையும் என்கிறார் முதலீட்டு நிபுணர் அமித் கோயல். வரலாற்றில் 2 முறை மட்டுமே தங்கம் விலை இம்மாதிரி உச்சம் தொட்டதாகவும். அதன்பின் பெரும் சரிவு கண்டதாகவும் கூறும் அவர், இம்முறையும் உச்சம் தொட்டு, பின் 1 சவரன் ₹62,161 வரையும், வெள்ளி 1 கிலோ ₹77,450 வரையும் குறையும் எனக் கணித்துள்ளார். ஆகவே தங்கம் வாங்க அவசரப்பட வேண்டாம் என்கிறார்.
Similar News
News October 18, 2025
பிரின்சிபால் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பிய மாணவர்கள்

அந்த காலத்து 90ஸ் கிட்ஸ் தேர்வு எழுத பயந்துவிட்டு வயிறு வலி, காய்ச்சல் அடிப்பதாக கதைவிடுவார்கள். ஆனால், இன்றைய 2K கிட்ஸ் தேர்வை நிறுத்த பிரின்சிபால் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பும் அளவிற்கு துணிந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் நடந்த இச்சம்பவத்தில், போலியான கல்லூரி அறிக்கையை தயாரித்த மாணவர்கள் அதை SM-ல் பரப்பியுள்ளனர். இதுதொடர்பாக 2 மாணவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்துகிறது.
News October 18, 2025
அமைச்சர் குடுகுடுப்பைக்காரன் போல் பேசக்கூடாது: அன்புமணி

TRB ராஜா அமைச்சரை போல பேச வேண்டும், மாறாக குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது என அன்புமணி விமர்சித்துள்ளார். ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்ததுபோல், முதலீடுகள் கண்டிப்பாக வரும் என மீண்டும் மீண்டும் சொல்லும் ராஜா, அது எப்போது வருமென சொல்லவில்லை எனவும் சாடியுள்ளார். மேலும் மக்களை ஏமாற்ற பொய்களை முதலீடு செய்யாமல், உண்மையாகவே முதலீடுகளை ஈர்க்க திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
News October 18, 2025
ராசி பலன்கள் (18.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.