News August 28, 2025
தங்கம் விலை தலைகீழாக மாறுகிறது

<<17539704>>1 சவரன்<<>> ஆபரணத் தங்கத்தின்(22 காரட்) விலை மீண்டும் ₹75,000-ஐ கடந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வு கணிப்புப்படி, 2030-ஆம் ஆண்டில் ஒரு சவரன் இருமடங்காக அதிகரித்து ₹1.50 லட்சமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். போர் உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பான முதலீடாக தங்கம், வெள்ளி பார்க்கப்படுவதாகவும், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கிக் குவிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News August 28, 2025
Tech: இந்த App உங்க ஃபோன்ல இருக்கா? முடிஞ்சுது போங்க!

ஓடிடி-யில் படம் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டதால் இதற்காகவே நெட்பிளிக்ஸ், ப்ரைம் அக்கவுண்ட்டுகளுக்கு பணம் செலுத்தி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் இதற்கு பணம் செலுத்த முடியாதவர்கள், அதில் வரும் படங்களை இலவசமாக பார்க்கவேண்டும் என்பதற்காக Playstore-ல் இல்லாத ‘Net Mirror’ போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர். இதுபோன்ற செயலிகள் உங்கள் ஃபோனை ஹாக் செய்வதோடு அதிலுள்ள தகவல்களை திருடலாம். உஷார்!
News August 28, 2025
BCCI-க்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய சீக்கா!

சீனியர் வீரர்களை BCCI தவறாக கையாள்வதாக சீக்கா சாடியுள்ளார். சீனியர் வீரர்களான கோலியும், ரோஹித்தும் ஓய்வு அறிவித்த போது அவர்கள் முறையாக வழியனுப்பபட்டார்களா எனவும், BCCI அவர்களிடம் இதுகுறித்து பேசியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புஜாராவிற்கும் இதேதான் நடந்ததாகவும், வீரர்கள் – BCCI இடையே தகவல் தொடர்பு இடைவெளி இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
News August 28, 2025
சற்றுமுன்: திமுக மூத்த தலைவர் காலமானார்

திமுக மூத்த தலைவரும், செயற்குழு உறுப்பினருமான குளித்தலை சிவராமன்(83) இன்று காலமானார். கரூரில் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில் இவருக்கு பாவேந்தர் விருது வழங்கப்பட இருந்தது. இந்நிலையில், உடல்நலக் குறைவால் உயிரிழந்த அவருக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கருணாநிதியின் தீவிர பற்றாளரான சிவராமன், தன் மீது தூய அன்பை வெளிப்படுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.