News February 25, 2025

ரூ.65 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

image

ஆபரணத் தங்கம் விலை ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது. ஜன. 1இல் 1 கிராம் ரூ.7,150க்கும், ஒரு சவரன் ரூ.57,200ஆகவும் இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து பிப். 1இல் 1 கிராம் ரூ.7,790ஆகவும், ஒரு சவரன் ரூ.62,320ஆகவும் உயர்ந்தது. பின்னர் பிப்.15இல் 1 கிராம் ரூ.7,890ஆகவும், சவரன் ரூ.63,120ஆகவும் அதிகரித்தது. இந்நிலையில் இன்று 1 கிராம் ரூ,8,075ஆகவும், சவரன் ரூ. 64,600ஆகவும் அதிகரித்துள்ளது.

Similar News

News February 25, 2025

மார்ச் 5 கூட்டத்தில் விவாதிக்கப் போவது என்ன?

image

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக மார்ச் 5ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு CM <<15574610>>ஸ்டாலின்<<>> அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதில் பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. குறிப்பாக மும்மொழிக் கொள்கை, நீட் விவகாரம், தமிழகத்திற்கு மத்திய அரசு நிலுவை வைத்துள்ள நிதி பிரச்னை குறித்தும் விவாதிக்கப்படும் என CM ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார்.

News February 25, 2025

ரூ.100க்காக நண்பனை கொன்ற இளைஞர்.. மடக்கியது போலீஸ்

image

டெல்லியில் 100 ரூபாய்க்காக நண்பனை கொன்ற இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளது. நரேலா பகுதியைச் சேர்ந்த அமன் (22), நண்பன் பண்டிக்கு ரூ.100 கடன் கொடுத்ததாகவும், அதை அவர் திரும்பி கேட்டபோது, பண்டி திரும்பி தராமல் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமன், பண்டி தலையில் செங்கல்லால் அடித்து கொலை செய்தான். சடலத்தை ரைஸ்மில் அருகே வீசிவிட்டு சென்றநிலையில், பாேலீஸ் மடக்கிப் பிடித்துள்ளது.

News February 25, 2025

கிராமி விருது பாடகி காலமானார்

image

கிராமி விருது பெற்ற அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி ராபர்டா பிளாக் (88) காலமானார். Killing Me Softly, The First Time I Ever Saw Your Face உள்ளிட்ட பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ராபர்டா பிளாக். அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக நேற்று காலமானார். அவர் உயிர் அமைதியாக பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!