News January 24, 2025

தங்கம் விலை ரூ.80,000ஆக அதிகரிக்க வாய்ப்பு

image

பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தைச் சந்திப்பதால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால், இந்தாண்டின் இறுதியில் ஒரு கிராம் ₹10,000ஐ எட்டும், 1 சவரன் ரூ.80,000ஆக உயரும் என MJDTA பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறியுள்ளார். 2025 ஜன.1ஆம் தேதி 57,200க்கு விற்பனையான நிலையில், 24 நாட்களில் சவரனுக்கு ரூ.3,240 <<15241985>>60,440<<>> உயர்ந்துள்ளது.

Similar News

News August 28, 2025

கலப்பு திருமணம் பாஜக ஆபிஸில் நடைபெறுமா? சீமான்

image

காதல் திருமணங்களுக்கு தங்களது கட்சி அலுவலகங்களை பயன்படுத்தலாம் என சிபிஎம் மற்றும் அண்ணாமலை கருத்து தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சீமான், ஒரு இந்து பையனுக்கும், இஸ்லாமியப் பெண்ணுக்கும் பாஜக அலுவலகத்தில் காதல் திருமணம் செய்து வைப்பார்களா? அதைப் போன்று உயர் சாதி பெண்ணுக்கும், பட்டியல் சமூக பையனுக்கும் சிபிஎம் சார்பில் காதல் திருமணம் செய்து வைப்பார்களா? என கேட்டுள்ளார்.

News August 28, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News August 28, 2025

விரைவில் தயாராகும் ‘கேப்டன் பிரபாகரன் 2’

image

‘கேப்டன் பிரபாகரன் 2’ படத்தை விரைவில் எடுப்பது குறித்து பரிசீலிப்பதாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சண்முக பாண்டியன் அவரது தந்தை விஜயகாந்தை போலவே இருப்பதால், நடிப்பதால், அவரை வைத்தே 2-ம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆன ‘கேப்டன் பிரபாகரன்’ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2k கிட்ஸும் அப்படத்தை வெகுவாக ரசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!