News October 15, 2025
தங்கம் விலை.. HAPPY NEWS

2 வாரங்களாக காலை, மாலை என போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்த தங்கம் <<18009956>>இன்று மாலை<<>> நேர வர்த்தகத்தில் மாற்றமின்றி விற்பனையாகிறது. கடந்த சில நாள்களுடன் ஒப்பிடும்போது விலை உயர்வு அளவும் இன்று குறைந்துள்ளது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, <<18013221>>பங்குச்சந்தை உயர்வு<<>>, உலக சந்தையிலும் தங்கம் விலை பெரிதாக மாறாததே விலை மாற்றமின்றி தொடர காரணம் என்றனர். இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் விலை சற்று குறையுமாம்.
Similar News
News January 17, 2026
சிவகங்கை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

சிவகங்கை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News January 17, 2026
சற்றுமுன்: 9 குழந்தைகள் அடுத்தடுத்து பலி

ரஷ்யாவின் நோவோகுஸ்னெட்ஸ்க் பகுதியில் உள்ள பிரபல ஹாஸ்பிடலில் 9 குழந்தைகள் பிறந்து சிலமணி நேரங்களிலேயே அடுத்தடுத்த சில நாள்களில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஹாஸ்பிடலை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. போலீஸார் விசாரித்ததில், டாக்டர்களின் கவனக்குறைவே இறப்புக்கு காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து, தலைமை டாக்டர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
News January 17, 2026
தேர்தலில் போட்டியிடலாமா? குழப்பத்தில் இருந்த திமுக!

தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக, கட்சி தொடங்கி 7 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடலாமா என்ற குழப்பத்தில் இருந்தது தெரியுமா? 1956-ல் திருச்சியில் 2வது மாநில மாநாடு நடந்தது. அதில் திமுக தேர்தலில் பங்கேற்பது குறித்து 2 வாக்கு பெட்டிகள் அமைத்து தொண்டர்களிடம் விருப்பம் கேட்கப்பட்டது. பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் 1957 தேர்தலில் முதல்முறையாக திமுக போட்டியிட்டு 15 இடங்களில் வென்றது.


