News November 21, 2024
ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நான்கு நாட்களில் சவரனுக்கு ₹1,680 உயர்ந்துள்ளது. 17ஆம் தேதி ₹6,935ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை, இன்று ₹7,145க்கு விற்கப்படுகிறது. இதனால், நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ₹57,160ஆக உள்ளது. வெள்ளியின் விலை கிராம் ₹101ஆக உள்ளது.
Similar News
News August 15, 2025
கூலி பட முதல் நாள் வசூல் சாதனை.. இவ்வளவு கோடியா?

நேற்று வெளியான ‘கூலி’ திரைப்படம் முதல் நாளில் சுமார் ₹140 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் ₹30 கோடியும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ₹65 கோடியும், வெளிநாடுகளில் ₹75 கோடி வரை வசூலித்திருக்கிறதாம். அடுத்த மூன்று நாள்கள் விடுமுறை என்பதால், வசூல் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. நீங்க படம் பாத்தாச்சா.. எப்படி இருக்கு?
News August 15, 2025
பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணியுங்கள்: ஹர்பஜன்

ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். எல்லையில் நமது இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்வதை ஒப்பிடும் போது ஒரு போட்டியை தவிர்ப்பது சிறிய காரியம் தான் என்றார். இருநாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளுக்கு முடிவு எட்டும் வரை பாகிஸ்தான் உடனான போட்டிகளை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
News August 15, 2025
வீரர்களின் கனவுகளை நனவாக்குவோம்: PM மோடி

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துகளை மக்களுக்கு PM மோடி தெரிவித்துள்ளார். இந்நாள் தரும் ஊக்கத்தில் கடுமையாக உழைத்து நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்குவோம் என தனது X தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் 12-வது முறையாக PM மோடி செங்கோட்டையில் கொடியேற்ற உள்ளார்.