News December 14, 2024
தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ. 720 குறைந்து ஒரு சவரன் ரூ.57,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல் ஒரு கிராம் ரூ.90 குறைந்து ரூ.7,140க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒருகிராம் ரூ.100க்கும், ஒருகிலோ ரூ.1,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது.
Similar News
News March 29, 2026
விபத்தில் பிரபல நடிகர் காலமானார்

கடலில் தவறி விழுந்த பெங்காலி நடிகர் ராகுல் அருணோதய் பானர்ஜி (42) மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் தல்சாரி பீச்சில் நடந்த ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட படகு விபத்தில் அவர் கடலில் தவறி விழுந்தார். ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவருடைய உயிர் பிரிந்தது. ‘சிரோதினி துமி ஜே அமர்’ படத்தில் அவரின் அசத்தலான நடிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. RIP
News March 29, 2026
வெள்ளி பொருள்கள் பளபளக்க… ஈஸி டிப்ஸ்!

வெள்ளி நகைகள் மற்றும் பூஜை பாத்திரங்கள் போன்றவை காலப்போக்கில் கருத்துவிடும். வீட்டில் உள்ள பொருள்களை கொண்டே அவற்றை உங்களால் மீண்டும் பளபளக்க செய்ய முடியும். *பேக்கிங் சோடா & தண்ணீரை சேர்த்து பேஸ்ட்டாக்கி, பிரஷ் கொண்டு தேய்த்து பளபளப்பாக்கலாம். *வெந்நீரில் டிடெர்ஜெண்ட் பவுடரை சேர்த்து, அதில் வெள்ளி பொருள்களை சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் மெதுவாக தேய்த்தாலும், அவை மீண்டும் புதுப்பொலிவு பெறும்.
News March 29, 2026
விஜய்க்கு திருச்சி கிழக்கு திமுக வேட்பாளர் சவால்!

எந்த காலத்திலாவது ஒரு கட்சி தலைவர் 2 தொகுதியில் போட்டியிடுவாரா என விஜய்யை இனிகோ இருதயராஜ் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி கிழக்கு திமுகவின் கோட்டை; அங்கு 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் என்றார். விஜய் தைரியம் இல்லாதவர் எனவும், திராணி இருந்தால் பெரம்பூரை விட்டுவிட்டு திருச்சி கிழக்கில் மட்டும் அவர் போட்டியிடட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>


