News April 7, 2025
3 நாள்களில் சவரனுக்கு ₹2,200 குறைந்த தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக சரிந்துள்ளது. கடந்த 3-ம் தேதி 22 கேரட் ஒரு சவரன் ₹68,480க்கு விற்பனையான நிலையில், இன்று ₹66,280க்கு விற்பனையாகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு எதிரொலியாக பங்குச்சந்தைகளில் நிலையற்றத் தன்மை நிலவுகிறது. இதனால், வரும் நாள்களிலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Similar News
News September 15, 2025
அதிமுகவுடன் கூட்டணி இல்லை: TTV தினகரன்

EPS, CM வேட்பாளராக இருக்கும் வரை ADMK அங்கம் வகிக்கும் NDA-வுடன் கூட்டணி இல்லை என TTV தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் AMMK இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி வாகை சூடும் என ஆருடம் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதாவின் பாணியை பின்பற்றி விஜய் பிரசாரம் செய்வதாக கூறப்படுவது தங்களது கட்சியினருக்கு பெருமை என்றார். உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.
News September 15, 2025
தாய்மையை தலைநிமிர வைத்த ஜுவாலா குட்டா

தன் சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை மார்பமுதாய் வழங்கி, நோயெதிர்ப்பு கொண்ட குழந்தையாக மாற்றும் வல்லமை கொண்டவள் பெண். அந்த அமுதம், தன் குழந்தைக்காக மட்டுமல்லாது, அதற்காக காத்திருக்கும் பல குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார் ஜுவாலா குட்டா. கிட்டத்தட்ட 30 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்கி உலகின் அனைத்து தாய்மார்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். பேட்மிண்டன் வீராங்கனையான இவர், விஷ்ணு விஷாலின் மனைவி ஆவார்.
News September 15, 2025
உலகின் விசித்திரமான இயற்கை அதிசயங்கள்

இயற்கையை விட சிறந்த படைப்பாளி, சிறந்த ஓவியர், சிறந்த டிசைனர் இருக்கவே முடியாது. உலகம் முழுவதும் அமைந்துள்ள இயற்கை காட்சிகளும், நிலத்தோற்றங்களும் இதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி, காட்சியளிக்கும் இடங்கள் சிலவற்றை மேலே உள்ள போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். swipe செய்து பாருங்கள். இதுபோல வேறு இடங்கள் இருந்தால் கமெண்ட்டில் சொல்லுங்கள்.