News April 5, 2025

2 நாளில் தங்கம் விலை ₹2000 குறைவு

image

கடந்த சில மாதங்களாகவே மக்களை கதிகலங்க வைத்தது ஆபரணத் தங்கத்தின் விலை. இந்நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ₹1,280, இன்று ₹720 என 2 நாளில் ₹2000 குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலை நேற்று ₹4, இன்று ₹5 என கிராமுக்கு ₹9, கிலோவுக்கு ₹9,000 குறைந்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் குறையும் என கூறப்படுவதால், பெண்கள், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News April 6, 2025

தோனி ஓய்வில்லை.. பிளெமிங் உறுதி

image

தோனி தற்போதைக்கு ஓய்வில்லை என்று சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். தோனியின் பெற்றோர் சிஎஸ்கே இன்று விளையாடும் போட்டியை காண சென்னை மைதானத்திற்கு வந்தனர். இதை வைத்து அவர் இன்று ஓய்வு பெறக்கூடும் எனத் தகவல் வெளியானது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பிளெமிங், அந்தத் தகவலில் உண்மையில்லை என்றும், தோனி இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

News April 5, 2025

ONOE அடுத்த தேர்தலில் அமல்? நிர்மலா சீதாராமன் விளக்கம்

image

ஒரே நாடு, ஒரே தேர்தல் (ONOE ) அடுத்த தேர்தலில் அமலாக இருப்பதாக வெளியாகும் செய்திகளை நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்காக ரூ.1 லட்சம் கோடி செலவிடப்பட்டதாகவும், ONOE அமலானால் பெரும் தொகையை சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2034க்கு பிறகே ONOE அமல்படுத்தப்படும், சட்டப்பேரவை, மக்களவைக்கு மட்டுமே பொருந்தும், உள்ளாட்சி அமைப்புக்கு அல்ல என்றும் கூறியுள்ளார்.

News April 5, 2025

ONOE திட்டத்துக்கு கருணாநிதி ஆதரவு: நிர்மலா சீதாராமன்

image

ONOE திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ONOE நாட்டுக்கு புதிதல்ல என்றும், 1960ம் ஆண்டுகள் வரை அமலில் இருந்ததுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நலனுக்காகவே ONOE திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், இதை கருணாநிதி ஆதரித்த நிலையில், அவரின் மகனும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!