News April 14, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.14) சவரனுக்கு ₹120 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,755-க்கும், சவரன் ₹70,040-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் சவரனுக்கு ₹4,360 அதிகரித்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று சற்று சரிந்துள்ளது.
Similar News
News November 6, 2025
வசீகரிக்கும் அழகில் ஸ்ருதி ஹாசன்!

எப்போதுமே SM-ல் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், ‘கூலி’ படத்திற்கு பிறகு சற்று இன்-ஆக்டிவாகி விட்டார். எனினும், வாடிக்கையாக போட்டோஷூட் செய்வதை அவர் தவறவிடுவதில்லை. ஸ்டைலிஷாகவும், கவர்ச்சியாகவும் போட்டோஷூட் செய்யும் ஸ்ருதி ஹாசன், இம்முறை மிளிரும் சேலை அணிந்து கிளாஸியான புகைப்படங்கள் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது SM-ல் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
News November 6, 2025
பாலில் ஊறவைத்த உலர் திராட்சையின் நன்மைகள்

*பாலில் ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையை சாப்பிடுவதால் எலும்புகள் வலுப்பெறும். *உடலில் ரத்த பற்றாக்குறையை தீர்க்க இது உதவும். *நம் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கும். *உடலில் உள்ள அனைத்து நச்சுகளும் வெளியேற்றப்படும். *ரத்த அழுத்த பிரச்னையை குறைத்திடும். *ஆண்களின் விந்தணு இயக்கம் அதிகரிக்கும். *பாலை நன்கு கொதிக்கவைத்து, அதன் பிறகு 10-15 உலர் திராட்சையை போட்டு ஊறவைத்து குடிக்கவும்.
News November 6, 2025
புலனாய்வுத்துறையில் 258 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

மத்திய அரசின் புலனாய்வுத்துறையில் 258 காலிப்பணியிடங்கள் உள்ளன. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று, 2023 முதல் 2025 வரை கேட் தேர்வில் தகுதி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். www.mha.gov.in/en என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக வரும் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


