News April 15, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹280 குறைவு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை இன்று (ஏப்.15) சவரனுக்கு ₹280 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,720-க்கும், சவரன் ₹69,760-க்கும் விற்பனையாகிறது. தமிழ்ப் புத்தாண்டு தினமான நேற்று சவரனுக்கு ₹120 குறைந்து சவரன் ₹70,040-க்கு விற்பனையான நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது நகைப் பிரியர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

Similar News

News November 12, 2025

IPPB-ல் 309 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

image

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் 309 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் அசோசியேட், அசிஸ்டண்ட் மேனேஜர் ஆகிய பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களில் 3 ஆண்டு பணி அனுபவம் தேவை. இதற்கு, வரும் டிச.1-ம் தேதிக்குள் https://ippbonline.bank.in/ தளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 12, 2025

1 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு பசும்பால் கொடுக்கலாமா?

image

1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாது. பசும்பாலில் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் இ, சி, இரும்புச்சத்து, ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவு இருக்காது. பசும்பாலின் கொழுப்பை செரிக்கும் அளவுக்கு குழந்தைகளின் செரிமான அமைப்பு இல்லை. எனவே முடிந்தவரை இதனை தவிருங்கள் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அனைவருக்கு இதை பகிருங்கள்.

News November 12, 2025

ஒரு மாதம் முழுவதும் காய்கறிகள்.. டிரை பண்ணுங்க

image

நீங்கள் ஒரு மாதம் தொடர்ந்து காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்து வந்தால், உங்கள் உடலில் என்னென்ன நடக்கும் என்று தெரியுமா? நீங்கள் நினைப்பதை விட அதிகளவிலான நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த நன்மைகளை கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!