News April 7, 2025
3 நாள்களில் சவரனுக்கு ₹2,200 குறைந்த தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக சரிந்துள்ளது. கடந்த 3-ம் தேதி 22 கேரட் ஒரு சவரன் ₹68,480க்கு விற்பனையான நிலையில், இன்று ₹66,280க்கு விற்பனையாகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு எதிரொலியாக பங்குச்சந்தைகளில் நிலையற்றத் தன்மை நிலவுகிறது. இதனால், வரும் நாள்களிலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Similar News
News November 28, 2025
டிட்வா புயலின் வேகம் அதிகரிப்பு

டிட்வா புயலின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 3 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த புயலின் வேகம், தற்போது 7 கிமீ ஆக அதிகரித்துள்ளது. புயலானது, சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 380 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து 270 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால், வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
News November 28, 2025
அன்புமணி செய்தது கட்சி திருட்டு: ஜிகே மணி

தந்தை – மகன் சண்டையால் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பாமக என தெரிவித்த ஜிகே மணி, EC-ல் போலியான ஆவணங்களை கொடுத்து அன்புமணி கட்சித் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அன்புமணி பாமக தலைவர் இல்லை என ராமதாஸ் அளித்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 28, 2025
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை… வந்தது அறிவிப்பு!

நாளை தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்ததாக சற்றுமுன் செய்தி வெளியானது. அந்த தகவல் சரியல்ல என்று தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே விடுமுறையை அறிவிப்பார்கள் என்றும், மாநிலம் முழுவதற்குமான ஒரே அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


