News April 1, 2025
தங்கம் விலை சவரன் ₹68,000ஐ கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.1) சவரனுக்கு ₹480 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,510க்கும், சவரன் புதிய உச்சமாக ₹68,080க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கடந்த சில நாள்களாக மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ₹114க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது.
Similar News
News January 24, 2026
கூட்டணியில் இணைந்தவுடன் டிடிவி அதிர்ச்சி அறிவிப்பு

NDA கூட்டணியில் இணைந்த இரண்டே நாளில் அமமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை TTV தினகரன் வெளியிட்டுள்ளார். முழு மனதுடனேயே NDA கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். இதனால், அமமுக முக்கிய தலைவர்கள் மட்டும் 2026 தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும், TTV ராஜ்யசபா எம்பியாக தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News January 24, 2026
அதானி வசமான IANS செய்தி நிறுவனம்

அதானி குழுமத்தின் ஆதிக்கம் நியூஸ் மீடியாவிலும் அதிகரித்துள்ளது. 2023-ல் பிரபல செய்தி நிறுவனமான IANS-ன் 50.50% பங்குகளை வாங்கிய அதானியின் மீடியா நிறுவனமான AMG மீடியா, 2024-ல் 76% பங்குகளை கைப்பற்றியது. தற்போது IANS நிறுவனத்தின் 100% பங்குகளுமே AMG மீடியா வசம் சென்றுவிட்டது. ஏற்கெனவே NDTV, Quint போன்ற செய்தி நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளும் அதானி குரூப்பிடமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 24, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜன.27-ம் தேதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்பட சென்சார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. ஒருவேளை சாதகமான தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அடுத்த வாரத்திலேயே திரைப்படத்தை வெளியிடுவதற்கான வேலையை படக்குழு தீவிரப்படுத்தியுள்ளதாம். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் மட்டும் சுமார் 1,000 தியேட்டர்களுக்கு மேல் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


