News April 8, 2024
தங்கம் விலை ரூ.53,000-ஐ தாண்டியது

கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டு சவரன் ரூ.53,000-ஐ தாண்டியுள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹53,280க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,660க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88க்கும், கிலோ வெள்ளி ரூ.1000 உயர்ந்து ரூ.88,000க்கும் விற்பனையாகிறது.
Similar News
News January 24, 2026
இரவில் பல் துலக்குவது அவசியமா?

தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். காலை எழுந்தவுடன் ஒருமுறை, இரவு தூங்கும் முன் ஒருமுறை. ஆனால், நம்மில் பலர் காலையில் பல் துலக்குவதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம், இரவில் அலட்சியமாக இருந்துவிடுகிறோம். ஆனால், இரவில் பல் துலக்குவதும் மிகவும் அவசியம். அப்போதுதான், உணவுத் துணுக்குகள் பற்களில் ஒட்டிக்கொண்டு கிருமிகள் வளர உதவுவதை தடுக்க முடியும்.
News January 24, 2026
பாடகி ஜானகியின் உடல்நலம் குறித்த வதந்திக்கு விளக்கம்

மகன் <<18931928>>முரளி கிருஷ்ணா<<>> இறந்த துக்கத்தில் பாடகி எஸ்.ஜானகி மறைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இது பொய்யான தகவல் என்று தெளிவுப்படுத்தியுள்ள ஜானகியின் பேத்தி அப்சரா வைத்யுலா, `குடும்பத்தினர், நண்பர்களின் அரவணைப்பில் எஸ்.ஜானகி நலமுடன் இருக்கிறார். எங்கள் குடும்ப வட்டத்திற்கு வெளியே உள்ள தனிநபர்களால் வதந்தி பரப்பப்படுகிறது. தவறான தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
News January 24, 2026
கோரைப்பாயின் சிறப்பே அதுதாங்க!

‘பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்’ என்பது மூத்தோரின் நல்வாக்கு. தமிழர்களது பண்பாட்டின் அடையாளமாக திகழும் கோரைப்பாயில் படுப்பதால் *அமைதியான உறக்கம் ஏற்படும் *மூட்டு, சதை சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும் *உடலின் ரத்த ஓட்டம் சீராவதுடன் மனதிற்கு புத்துணர்ச்சி உண்டாகும் *கோரைப்பாயின் மற்றொரு சிறப்பு கோடைக் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் இதமான வெப்பத்தையும் அளிக்கும். SHARE IT


