News April 19, 2025
இந்த வாரம் முடிவுக்கு வந்த தங்கம் விலை!

தங்கம் விலை இந்த வாரத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்த வந்த நிலையில், இன்று (ஏப்.19) மாற்றமின்றி விற்பனையாகிறது. இந்த வாரத்தில் 1 கிராம் 225 ரூபாயும், சவரன் 1,800 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று மாற்றமின்றி 1 கிராம் ₹8,945-க்கும், ₹71,560-க்கும் விற்பனையாகிறது. நாளையும் இதே விலைதான் என்பதால் ஒரு ஸ்பீடு பிரேக் போடப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்க கருத்து என்ன?
Similar News
News January 5, 2026
ராமநாதபுரத்தில் அதிர்ச்சி.. இறைச்சிக்காக ஆமை வேட்டை.!

கீழக்கரை சில்வஸ்டர் 52, சத்யராஜ் 40, பாலமுருகன் 35, முனியசிவா 33, நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று வலையில் சிக்கிய இரு அரிய வகை பச்சை கடல் ஆமைகளை பிடித்து இறைச்சிக்காக கொன்றனர். ரோந்து வந்த வனச்சரக அலுவலர் கவுசிகா, வனவர் காளிதாஸ், வனக்காப்பாளர் பிரபு, சோமு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஆமையை கொன்ற 4 பேரையும் கைது செய்து, தலா 50, 35 கிலோ எடை கொண்ட ஆமைகளை பறிமுதல் செய்தனர்.
News January 5, 2026
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய நேரம் நீட்டிப்பு!

ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நேரத்தை இன்றிலிருந்து காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை IRCTC நீட்டித்துள்ளது. கடந்த ஆண்டு, முன்பதிவு செய்ய ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை இந்திய ரயில்வே கட்டாயமாக்கியது. அதனையடுத்து காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய பயனர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
News January 5, 2026
கனிமொழியுடன் போனில் பேசிய அமித்ஷா

திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, கனிமொழியை போனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என அமித்ஷா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் இவர்கள் போனில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டது TN அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.


