News August 10, 2025
தங்கமா அல்லது நிலமா? எதில் முதலீடு செய்யலாம்?

பங்குச்சந்தையின் கிங் என அழைக்கப்படும் வாரன் பஃபெட், தங்கத்தை மதிப்புமிக்கதாக கருதவில்லை. அவரிடம் ₹12 லட்சம் கோடி சொத்துக்கள் இருந்தும், தங்கத்தில் ஒரு பைசா கூட முதலீடு செய்யவில்லை. தங்கமா (அ) நிலமா? என கேட்டால், நிலத்தையே மதிப்புமிக்கதாக கருதுகிறார். தங்கத்தை விட நிலத்தில் முதலீடு, தொழில் செய்வதுதான் பெஸ்ட் என கூறுகிறார். இதன்மூலம், நீண்ட காலத்திற்கு நிலையான பலன்கள் கிடைக்கும் என நம்புகிறார்.
Similar News
News August 10, 2025
ராணிப்பேட்டை: வேலை வாய்ப்பு அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூட்டுறவுத்துறையில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பதினைந்து இடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது http://drbrpt.in என்ற இணையதளம் வழியாக ஆகஸ்ட் 29 தேதி வரை உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நண்பர்களுக்கு பகிரவும்.
News August 10, 2025
திமுகவிடம் பொதுத்தொகுதிக்கு பாடுபடும் திருமா: சீமான் தாக்கு

தமிழ்நாட்டில் தமிழர்களால் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் உள்ளது; இதில் எங்கிருந்து திராவிட மாடல் ஆட்சி வருகிறது என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப்பெற திருமா என்ன பாடுபடுகிறார். பொதுக்குளத்தில் நீங்கள் எல்லாம் குளிக்கக்கூடாது என்பதுபோல் பொதுத்தொகுதிக்கு நீங்கள் எல்லாம் ஆசைப்படக்கூடாது என்று திமுக சொன்னது பதிவாகியுள்ளது எனவும் சாடினார்.
News August 10, 2025
பும்ராவிற்கு எதிராக கிளம்பும் முன்னாள் வீரர்கள்

பும்ரா தனது விருப்பத்திற்கேற்ப டெஸ்ட்டில் பங்கேற்பது குறித்து முன்னாள் வீரர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். IND vs ENG தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவேன் என பும்ரா கூறியதை வேறு ஒருவர் கூறியிருந்தால், இந்நேரம் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என ரஹானேவும், ஓய்வு இல்லாமல் பந்துவீசும் சிராஜ் போன்ற வீரர்கள் தான் அணிக்கு தேவை என கபில் தேவும் தெரிவித்துள்ளனர்.