News August 20, 2025
கடத்தல் தங்கம்: மத்திய அரசு வெளியிட்ட ஷாக் கணக்கு

2023-24-ல் 6,599 கடத்தல் வழக்குகளில் 4,972 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பார்லிமென்ட்டில் கூறியுள்ளார். இது, 2022 – 23-ல் 4,343 கிலோ, 2021 – 2022 நிதியாண்டில் 2,172 கிலோவாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசின் இந்தத் தகவல் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சட்டவிரோதமான கடத்தல் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. இதனை தடுக்க என்ன வழி?
Similar News
News January 20, 2026
பெர்லின் திரைப்பட விழாவில் இணைந்த 4-வது தமிழ்ப் படம்!

76-வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் FORUM பிரிவில் இரா. கௌதமின் ‘சிக்கலான் குடும்பத்தின் உறுப்பினர்கள்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. அலைபாயுதே, பருத்திவீரன், கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களுக்கு அடுத்து, இப்பிரிவில் தேர்வாகும் 4-வது திரைப்படம் இது. மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே பெர்லின் திரைப்பட விழாவிற்கு தேர்வாவது இதுவே முதல்முறை.
News January 20, 2026
சற்றுமுன்: அதிமுக கூட்டணியில் புதிய கட்சி

கூட்டணி முடிவை இறுதி செய்யாத IJK, தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என பேசப்பட்டது. இந்நிலையில், NDA கூட்டணியிலேயே தாங்கள் தொடர்வதாக IJK நிறுவனர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். ஜன.23-ல் PM மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தங்களுக்கு அழைப்பு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 6 சீட்கள் வரை கேட்டுள்ளதாகவும் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
ஆன்லைனில் EB பில் கட்டுவதற்கு முன் இத படிங்க!

EB பில் தொடர்பாக போலி SMS சோஷியல் மீடியாவில் தொடர்ந்து பகிரப்படுவதால், போலியான லிங்க் மூலம் பில் கட்டி ஏமாற வேண்டாம் என TNEB அறிவுறுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வமற்ற இணையதள லிங்க் உடன் மெசேஜ் வந்தாலும் அவற்றை தவிர்க்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான TNEB செயலி & அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே EB பில் கட்டும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. SHARE IT.


