News April 15, 2025
பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கம்.. பரபரப்பு தகவல்

BSP மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து <<16103800>>பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்<<>> நீக்கத்திற்கு மாநிலத் தலைவர் ஆனந்தன் தான் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் நடந்த செயற்குழு கூட்டத்தில், பொற்கொடி தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆனந்தன் மீது பல புகார்களை கூறினர். குறிப்பாக ஆனந்தன் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக மேலிடப் பிரதிநிதிகளிடம் பொற்கொடி கூறியிருந்த நிலையில், இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
Similar News
News September 17, 2025
‘மதராஸி’ படத்தின் OTT ரிலீஸ் எப்போது?

‘மதராஸி’ படம் வரும் அக்., 3-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 5-ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதனால் தான், முதல் 2 நாள்களில் ₹50 கோடி வசூலித்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 நாள்களை கடந்தும் வசூல் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை என கூறப்படுகிறது.
News September 17, 2025
19 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
இன்று காலை 8 மணிக்கு ரெடியா இருங்க!

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர், இன்று காலை 8 மணிக்கு தயாராக இருக்க வேண்டும். ஏனெனில், தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் இருந்து மதுரை, செங்கோட்டை, நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி பகுதிகளுக்கு வரும் அக்., 29 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.