News March 13, 2025
ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சம்

ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, ₹65 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹440 உயர்ந்து ₹64,960க்கும், கிராமுக்கு ₹55 உயர்ந்து ₹8,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹110க்கும் விற்பனையாகிறது.
Similar News
News March 13, 2025
இது நவீன இந்தித் திணிப்பு : அன்புமணி காட்டம்

சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு <<15744608>>இந்தியில் <<>>மட்டும் பதிலளிப்பதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது. இதற்கு எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழில் வாடிக்கையாளர் சேவை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News March 13, 2025
அதிமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்.. இபிஎஸ் இரங்கல்

வந்தவாசி தொகுதி முன்னாள் எம்எல்ஏ குணசீலன் உடல்நலக்குறைவால் காலமானார். வந்தவாசி திமுக கோட்டையாக இருந்தது. அந்த கோட்டையை 2011இல் உடைத்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு குணசீலன் அபார வெற்றி பெற்றார். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். மக்களின் அன்பை பெற்ற அவரது மறைவிற்கு இபிஎஸ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
News March 13, 2025
லைவ் ஸ்ட்ரீமிங்கில் கொலை! Influencerக்கு நேர்ந்த கொடூரம்!

வாங்கிய கடனுக்காக இளம்பெண் ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவில் ஐரி (22), லைவ் ஸ்ட்ரீமிங்கில் இருந்தபோது, கடன் கொடுத்த டக்கனோ (42), அவரை கத்தியால் குத்தி இருக்கிறார். ‘ஹெல்ப்’ என ஐரியின் அலறல் சத்தம் மட்டுமே கடைசியாக கேட்டுள்ளது. அத்துடன் அவரது உயிர் பிரிந்து விட்டது. இப்போது, கடனுக்காக கொலை செய்த டக்கனோவால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியுமா? பணம் தான் திரும்ப கிடைக்குமா?