News April 20, 2025
ரிசர்வ் வங்கி கையிருப்பில் அதிகரிக்கும் தங்கம்!

ஏப்.11 அன்றுடன் முடிந்த வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு மதிப்பு ₹11,986 கோடி அளவு அதிகரித்துள்ளது. இதனால் கையிருப்பில் உள்ள மொத்த தங்கத்தின் மதிப்பு ₹6,88,496 கோடியாக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி(RBI) தெரிவித்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையேயான வரிப்போர், சர்வதேச வர்த்தக பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Similar News
News January 18, 2026
சற்றுமுன்: ஈரானில் 3,090 பேர் பலி!

ஈரானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 3,090 ஆக அதிகரித்துள்ளது. அங்கு அத்தியாவசிய பொருள்களின் விலை 75% வரை உயர்ந்துள்ளன. மன்னராட்சிக்கும் மத குருமார்கள் ஆட்சிக்கும் இடையிலான அதிகாரப் போட்டியாக இந்தப் போராட்டம் மாறிவருகிறது. இதனிடையே ஈரானில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு முழு காரணம் டிரம்ப் எனவும் அவர் குற்றவாளி என்றும் <<18885675>>கமேனி<<>> தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
மாதவிடாய் காலத்தில் ரத்த தானம் செய்யலாமா?

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ரத்த தானம் செய்வது தொடர்பான அச்சங்கள் கட்டுக்கதைகளே என டாக்டர்கள் விளக்குகின்றனர். *இது முற்றிலும் பாதுகாப்பானது *தானம் செய்யும் ரத்தம் வேறு, மாதவிடாய் ரத்தம் வேறு. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது *ரத்த தானம் அளிக்க ஹீமோகுளோபின் 12.5g/dL-க்கு மேல் இருக்க வேண்டும் *ரத்த தானம் செய்தால் Cramps அதிகமாகாது. ஆனால், Cramps, ரத்தப்போக்கு அதிகம் இருந்தால் தானத்தை தவிர்க்கலாம்.
News January 18, 2026
BREAKING: சிக்கன் விலை வரலாறு காணாத உயர்வு

நாமக்கல் மொத்த சந்தையில் கறிக்கோழி விலை இன்று கிலோவுக்கு ₹3 அதிகரித்துள்ளது. இதனால், இதுவரை இல்லாத வகையில் 1 கிலோ ₹152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோழி 1 கிலோ ₹82-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் முட்டை 30 காசுகள் குறைந்து ₹5.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிக்கன் விலை உயர்வால் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ சிக்கன் ₹240 – ₹300 வரை விற்பனையாகிறது. உங்கள் ஊரில் எவ்வளவு?


