News February 13, 2025

உச்சத்தில் தங்க இடிஎஃப் முதலீடு

image

கடந்த மாதத்தில் தங்க ETF திட்டங்களில், வரலாறு காணாத அளவுக்கு முதலீடு பெறப்பட்டுள்ளதாக இந்திய மியூச்சுவல் பண்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரேமாதத்தில் தங்க ETFல் ₹3,751 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. சமீபகாலமாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வதை விட, ETF திட்டங்கள் வாயிலாக தங்கத்தை யூனிட்களாக டிஜிட்டல் வடிவில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

Similar News

News February 13, 2025

6 நாட்களுக்குப் பின் மீண்ட பங்குச்சந்தைகள்

image

இந்திய பங்குச்சந்தைகள் 6 நாட்களாக சரிவை சந்தித்த நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்றம் கண்டன. BSE 400 புள்ளிகளுக்கு மேலாகவும், நிஃப்டி 50 புள்ளிகளுக்கு மேலாகவும் உயர்வை சந்தித்து வர்த்தகமாகின்றன. சிப்லா, பாரத் எலெக்ட்ரானிக்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன.

News February 13, 2025

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் இனி பணிநீக்கம்..

image

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் வகையில் விதிகளை திருத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் மீதான பாலியல் தாக்குதல்களை முற்றிலும் தடுக்கவும், புகாரில் சிக்கியவர்கள் சில நாட்கள் சஸ்பெண்ட் ஆகி ஜாமின் பெற்று வெளியில் வந்துவிடுவதால் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News February 13, 2025

பாலியல் புகாரில் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்

image

சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கெனவே காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடத்த விசாகா கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!