News March 27, 2025
வங்கியில் தங்கம் டெபாசிட் (GMS) திட்டம் நிறுத்தம்!

தங்கத்தை வங்கியில், டெபாசிட் செய்து வட்டி வருமானம் ஈட்டும், தங்க முதலீடு திட்டத்தை நிறுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 2015இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தபின், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, தங்கத்தை முதலீடு செய்திருந்தால், தற்போதைய விதிகளின்படி, அதற்கான காலம் முடியும் வரை பலன்களைப் பெறலாம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 30, 2025
RED WINE இதயத்துக்கு நல்லதா?

RED WINE குறித்து The Journal of Nutrition, Health, Aging என்ற புத்தகத்தில் ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், தினமும் சிறிதளவு RED WINE அருந்துவது உடலில் கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் RED WINE-ஐ அளவுக்கு அதிகமாக அருந்துவது கொழுப்பை அதிகரிக்கச் செய்து விடும் என்றும், இதனால் இதயத்துக்கு நல்லதல்ல, பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News March 30, 2025
பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் நடிகர் மரணம்

ஹாலிவுட்டின் பிரபல நடிகரும் சண்டை பயிற்சியாளருமான ரிச்சர்ட் நார்ட்டன்(75) காலமானார். ஹாலிவுட்டின் முக்கிய நடிகர்கள், நடிகைகளுக்கு ஸ்டண்ட் பயிற்சி கொடுத்தவர் நார்ட்டன். ஜாக்கி சான், சமோ ஹங், சிந்தியா ரத்ரோக் போன்ற பெரிய தற்காப்பு நடிகர்களுடனும் இவர் திரையில் மல்லுக்கட்டியுள்ளார். The Condemned, Mad Max: Fury Road, Suicide Squad, Furiosa:A Mad Max Saga ஆகியவை இவரது லேட்டஸ்ட் படங்களில் முக்கியமானவை.
News March 30, 2025
தி.மலை கிரிவல பாதையில் நிர்வாணமாக சென்ற சாமியார்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் சாமியார் ஒருவர் நிர்வாணமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தி.மலையில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமன்றி, வெளிமாநில பக்தர்களும் கிரிவலம் செல்வது வழக்கமாகும். இந்நிலையில் இன்று அங்கு சாமியார் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக சென்றார். இதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியான நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவருக்கு புத்தாடை வாங்கி அணிவித்து அனுப்பி வைத்தனர்.