News April 1, 2025
சீனாவில் புதைந்து கிடக்கும் தங்கம்

சீனாவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அந்நாட்டின் வடகிழக்கு மாகாணமான லியானிங்கில், சுமார் 1,000 டன் அளவுக்கு தங்கப் படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்த தங்கத்தை எடுப்பது மிகக் கடினம் என்று சர்வதேச நிபுணர்கள் கூறினாலும், சீன நிபுணர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. தங்கம் எடுத்தே தீருவோம் என்கின்றனர். உலகில் தற்போது தங்கம் அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 2, 2025
ஹாலிவுட் ‘பேட் பாய்’ நடிகர் காலமானார்

டாப் கன், பேட்மேன் ஃபாரவர், தி டோர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வால் கில்மெர்(65) காலமானார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பிறந்து வளர்ந்த அவர், ஹாலிவுட் பேட் பாய் என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். நிமோனியாவில் பாதிக்கப்பட்ட கில்மெர், உயிரிழந்துவிட்டதாக அவரது மகள் மெர்சிடெஸ் தெரிவித்துள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
News April 2, 2025
நாடாளுமன்றத்தில் வக்ஃபு மசோதா தாக்கல்: எதிர்ப்பு

நாடாளுமன்றத்தில் தாக்கலான வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மசோதாவின் அம்சங்கள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. திருத்தங்களை மேற்கொள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அதிகாரமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அனைத்து நடமுறைகளும் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
News April 2, 2025
ஊடுருவ முயன்ற பாக்., ராணுவம்.. இந்தியா பதிலடி..

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 -5 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி ஊடுருவ முயன்றதோடு தாக்குதலிலும் ஈடுபட்டனர். பதில் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர் ஊடுருவலைத் தடுத்தனர். இதனையடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.