News April 28, 2025
தங்க பத்திர திட்ட முதலீடு: RBI புதிய அறிவிப்பு!

2020 – 21-ம் நிதியாண்டில் தங்க பத்திர திட்டத்தில் (SGB) முதலீடு செய்தவர்கள் முன்கூட்டியே அவற்றை திரும்பப் பெறலாம் என RBI அறிவித்துள்ளது. இவ்வாறு விற்பனை செய்பவர்களுக்கு 1 யூனிட் (அ) 1 கிராம் தங்கத்திற்கு ₹9,600 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தங்க பத்திரங்கள் 8 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டவை. ஆனால் 5 ஆண்டுகள் முடிந்த உடனே அதனை விற்று பணமாக்கும் வாய்ப்பை RBI தற்போது அறிவித்துள்ளது.
Similar News
News November 16, 2025
புதுச்சேரி: ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர் வாய்ப்பு!

மத்திய அரசின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நிறுவனத்தில் காலியாக உள்ள 2569 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10-12-2025 தேதிக்குள் <
News November 16, 2025
ரஜினி வீட்டில் காலையிலேயே பரபரப்பு

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் K.S.ரவிக்குமார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுபாட்டு அறைக்கு பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, இருவரின் வீடுகளிலும் சோதனை செய்ய தேனாம்பேட்டை போலீசார் விரைந்தனர். ஆனால், <<18274391>>ரஜினி <<>>தரப்பில் சோதனை வேண்டாம் என மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் K.S.ரவிக்குமார் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
News November 16, 2025
ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்: மோகன் பகவத்

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறுகிறார்கள் என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பெரும் பகுதியினர் இன்னும் பின் தங்கியே உள்ளனர். உலக மக்கள் தொகுதியில் வெறும் 4% பேர், 80% உலக வளங்களை பயன்படுத்துகின்றனர். வளங்கள் யாரிடமிருந்து எடுக்கப்படுகிறதோ, அவர்கள் முன்னேற்றத்தின் பலனை பெறுவதில்லை என கூறியுள்ளார்.


