News April 19, 2025
தங்க குண்டு மணி, பழங்கால பானை கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தங்க குண்டு மணி, பழங்கால பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் அகழாய்வில் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. அந்த வகையில் ஆபரணங்களிலும் தமிழர்கள் அதிக கவனம் செலுத்தியதற்கான சான்று கொடும்பாளூரில் நடந்த அகழாய்வில் கிடைத்துள்ளது. அதனுடன் அழகிய மண்பானையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 16, 2026
இனி தனித்தே போட்டி: மாயாவதி

2027 உ.பி., சட்டமன்ற தேர்தல் உள்பட இனிவரும் அனைத்து தேர்தல்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடிய அவர், கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது, தங்கள் கட்சி வாக்குகள் மற்ற கட்சிகளுக்கு முழுமையாக சென்றன. ஆனால் மற்ற கட்சிகளின் வாக்குகள் தங்களுக்கு வரவில்லை என்றவர், அதனால் BSP இனி தனித்தே களம் காணும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
சர்க்கரை பொங்கலை சுட வைத்து சாப்பிடலாமா?

பொதுவாக சர்க்கரை பொங்கலை ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் காலையில் சுட வைத்து சாப்பிடலாம். அதற்கு பொங்கலை காற்று புகாத பாத்திரத்தில் வைக்க வேண்டும். ஃப்ரிட்ஜுக்குள் வைப்பதற்கு முன் அது ஆறியிருக்க வேண்டும். மாவுச்சத்து, நெய் காரணமாக, சர்க்கரை பொங்கல் ஆறும்போது இயற்கையாகவே கெட்டியாகிவிடும். எனவே மறுநாள் அதன் இயல்பான பதத்தை பெற, பரிமாறுவதற்கு முன் சிறிது சூடான நீர் அல்லது பாலைச் சேர்ப்பது நல்லது.
News January 16, 2026
ராசி பலன்கள் (16.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


