News August 10, 2024
ஒலிம்பிக்ஸில் தங்கம்: அமெரிக்கா, சீனா சமநிலை

ஒலிம்பிக்ஸில் அமெரிக்கா, சீனா தலா 33 தங்கப்பதக்கங்களுடன், தங்கம் வென்ற நாடுகள் வரிசையில் சமமாக உள்ளன. அதேநேரத்தில், அமெரிக்கா 39 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களைக் கைப்பற்றி, மொத்த பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சீனா 27 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 69வது இடத்தில் உள்ளது.
Similar News
News November 25, 2025
வங்கியில் பணம் பாதுகாப்பாக இருக்க CHECK THIS!

கூகுளில் வங்கியின் பெயரில் பல போலி வலைதளங்கள் இருப்பதால், பணத்தை இழக்கும் அபாயம் இருந்துவந்தது. இனி அந்த கவலையே வேண்டாம். இதற்கான புதிய விதிகளை RBI கொண்டுவந்துள்ளது. அதாவது, இனி நீங்கள் பயன்படுத்தும் வங்கிகளின் ஒரிஜினல் வலைதளம் அனைத்தும் ‘bankname.bank.in’ என்ற URL-ல் தான் வரும். இப்படி வரும் வலைதளங்களை மட்டுமே நம்பி Access பண்ணுங்க. யாரும் பணத்தை இழக்காமல் இருக்க SHARE THIS.
News November 25, 2025
சற்றுமுன்: விலை ₹3,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ₹3 உயர்ந்து ₹174-க்கும், கிலோ வெள்ளி ₹3,000 உயர்ந்து ₹1,74,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹1000 குறைந்த நிலையில் இன்று ₹3,000 உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News November 25, 2025
மோசடி அரசியலை ஒழிப்பது தான் பாஜக திட்டம்

திராவிட அரசியலை பேசக்கூடிய கட்சிகளே இல்லை என்பதை உருவாக்குவதுதான் பாஜகவின் செயல் திட்டம் என திருமா பேசியதற்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். திராவிடம் என்பது நிலப்பரப்பு. திராவிடம் இந்தியாவின் அங்கம். அதை ஓர் இனமாக பிரித்து பேசி முன்வைக்க கூடிய திராவிட அரசியல் என்பது ஏமாற்று வேலை, மோசடி அரசியல். இதை ஒழிப்பதுதான் பாஜகவின் செயல்திட்டம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.


