News April 4, 2025
அதிரடியாக குறையும் தங்கம், வெள்ளி விலை

மற்ற நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரியால் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடும் சரிவை கண்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 68 டாலர்கள் (1.8%) குறைந்து 3,046 டாலர்களுக்கு வர்த்தகம் ஆகிறது. வெள்ளியின் விலை 1.68 டாலர்கள் (5.3%) குறைந்து 3.22 டாலர்களுக்கு வர்த்தகம் ஆகிறது. இதனால், இந்திய சந்தையில் நாளை தங்கம் விலை சரிவைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 3, 2026
பொங்கல் ஜல்லிக்கட்டு.. தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. *போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஊக்க மருந்துகள், எரிச்சலூட்டும் மருந்துகள் கொடுக்கக் கூடாது. *காயமடைந்தவர்களுக்கு முறையாக முதலுதவி அளிக்கப்பட வேண்டும். *போட்டி நடைபெறும் இடத்தில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். SHARE IT.
News January 3, 2026
தவெகவில் இணைந்த அதிமுக முக்கிய தலைவர்கள் (PHOTOS)

பொங்கலுக்குள் அதிமுகவிலிருந்து பல தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என KAS கூறிய நிலையில், அடுத்தடுத்து பலர் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். சேலத்திலிருந்து <<18692753>>பல்பாக்கி கிருஷ்ணன்<<>>, கரூரிலிருந்து மரியமுல் ஆசியா, சென்னையிலிருந்து <<18746502>>JCD பிரபாகர்<<>> என அதிமுக EX MLA-க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர். இதனால், அதிமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களை சரிகட்டும் முயற்சியில் EPS களமிறங்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
News January 3, 2026
2 கண்களுக்கு மேல் உள்ள விலங்குகள்

உலகில் வாழும் உயிரினங்கள் நம்பமுடியாத அளவிற்குப் பன்முகத்தன்மை கொண்டவையாக உள்ளன. அந்த வகையில், சில விலங்குகளுக்கு 2-க்கும் மேற்பட்ட கண்கள் உள்ளன. ஊர்வன முதல் கடல்வாழ் உயிரினங்கள் வரை, பல கண்களைக் கொண்ட சில விலங்குகளின் போட்டோக்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


